உலகம்

கொவிட்-19 : உலகளவில் அதிகமான வேலை நிறுத்தங்கள்

28/05/2020 08:10 PM

ஜெனிவா, 28 மே (பெர்னாமா) -- உலகையே முடக்கம் காணச் செய்த கொவிட்-19 பெருந்தொற்றினால், உலகளவில், அறுவரில் ஒரு இளைஞர், வேலை நிறுத்தச் சூழலை எதிர்நோக்குகின்றார். 

இப்பிரச்சனையை முழுமையாக கையாளப்படா விட்டால், எதிர்காலத்தில், இளைய சமூதாயத்தினருக்கு வேலையில்லா திண்டாடத்தை ஏற்படுத்தி விடும் என்று ஐநா ஊழியர் சங்கம் எச்சரித்திருக்கிறது. 

இந்நிலையில், கொவிட்-19 நோய் பரவல் காலக்கட்டத்தில், இதுவரை, மூப்பது கோடியே ஐம்பது லட்சம் முழு நேர வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அனைத்துலக தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. 

பெரும்பாலான வேலை இழப்புகள் அமெரிக்கர்களை உட்படுத்தியதாகும் என்று அனைத்துலக தொழிலாளர் சங்கத்தின் தலைமை இயக்குநர் கை ரைடர் தெரிவித்திருக்கிறார். 

உலகம் முழுவதிலும் பணியில் இருக்கும் 17 கோடியே 50 லட்ச இளைஞர்களில், 40 விழுக்காட்டினர், இப்பெருந்தொற்றினால் மோசமான பாதிப்படைந்திருக்கும் துறையைச் சார்ந்தவர்களாவர். 

-பெர்னாமா