BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

கொவிட் 19 நோய்த் தொற்று தொடர்பில் முகிடின் - எர்டோகன் தொலைப்பேசி உரையாடல்

29/05/2020 08:16 PM

கோலாலம்பூர், 29 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் மருத்துகளை உருவாக்க மலேசியா துருக்கியுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். 

நேற்று துருக்கிய அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன்-னுடன் தொலைப்பேசியில் கலந்து உரையாடியதை தொடர்ந்து, கொவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து தங்கள் சக்தியைப் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும்  அவர் கூறியிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி, மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பல கட்டங்களாக, சிள தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டதே, தற்போது நாட்டில் கொவிட் 19 நோய் சம்பவங்கள் குறைந்து வருவதற்கு காரணம் என்று முகிடின், எர்டோகன்-னுக்கு விளக்கமளித்திருக்கிறார்.

இதனிடையே, இரு நாடுகளுக்குமிடையே தற்போது உள்ள உறவை வலுப்படுத்த வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, உயர் கல்வி, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அவருடன் கலந்து ஆலோசித்ததாகவும் முகிடின் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களுக்கான போராட்டத்தில் மலேசியா முக்கிய பங்கு வகித்ததாகவும், அனைத்துல ரீதியில் மலேசியா தொடர்ந்து ஈடுபாடுடன் இருக்க துருக்கி கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

தொடர்ந்து, இருவரும் நோன்பு பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் முகிடின் தனது முகநூல் பதிவில் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா