விளையாட்டு

பகாங் மாநில சிலம்ப கழகம்: சிலம்ப பயிற்சி பட்டறை

03/08/2020 08:11 PM

மெந்தகாப், 03 ஆகஸ்டு (பெர்னாமா) -- தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான, கம்பு சுற்றும் சிலம்பக் கலையை முன்பு ஆண்கள் மட்டுமே கற்று வந்த நிலையில், ஆனால் இன்று பெண்களும் சிறார்களும் அக்கலையைக் கற்று வருவது பாராட்டுக்குரியது. 

இந்த நவீன காலகட்டத்திலும், நாட்டில் பல மாநிலங்களில் இக்கலையைப் பலர் இன்னும் முறைப்படி கற்றுக்கொடுத்து வருகின்றனர். 

இதில், மலேசிய சிலம்ப கழகத்தினரின் ஒத்துழைப்புடன், பகாங் மாநில சிலம்ப கழகம், அண்மையில் மெந்தகாப், தாமான் ரிம்பாவில் சிலம்ப பயிற்சி பட்டறை ஒன்றை சிறப்பாக நடத்தியது. 

இப்பயிற்சி பட்டறையில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சுக்மா போட்டியில் பங்குக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேசிய உதவித் தலைவரும் பகாங் மாநில சிலம்பம் கழக தலைருமான ம. தருமசீலன் கூறினார். 

இதனைக் கவனத்தில் கொண்டு, அப்பகுதியின் சுற்று வட்டாரத்திலுள்ள பெற்றோர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் தாங்கள் நடத்தும், சிலம்ப பயிற்சி வகுப்பில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

சிலம்பக் கலையானது பாரம்பரிய தற்காப்பு கலை என்பதால், வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் கண்டிப்பாக இக்கலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தருமசீலன் கூறினார். 

அதேவேளையில், பகாங் மாநிலத்தில் இம்மாதிரியான சிலம்பப் பயிற்சிகளை வழி நடத்த முன் வருபவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டார். 

தருமசீலன்- 019 938 2138 

வி.எம் சரவணன் - 011 2345 0272 

த. பத்மசீலன் - 017 966 5714

--பெர்னாமா