கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டிய பொது இடங்கள்

07/08/2020 05:11 PM

கோலாலம்பூர், 7 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டிய பொது இடங்களின் பட்டியல் பின்வருமாறு : 

* மசூதி, பள்ளி வாசல், வழிப்பாட்டுத் தலங்கள் 
* சமூக நிகழ்வுகள் 
* பேருந்து, ரயில், விமானம், பள்ளி பேருந்து போன்ற பொது போக்குவரத்துகள் 
* மருத்துவமனை மற்றும் கிளினிக் 
* பொதுச் சந்தைகள் 
* திரையரங்கம் 
* வணிக மையங்கள், பேரங்காடிகள், மளிகை கடைகள், எண்ணெய் நிலையங்கள் 
* உணவு கடைகள் 
* பட்டறைகள் 
* முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகை அலங்கார நிலையம் 
* பொழுதுபோக்கு மையங்கள் 
* கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்கள் 

முகக்கவசம் அணியும் விவகாரத்தில் மக்களிடையே எழுந்துள்ள குழப்பதை தீர்க்க புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இணை இயக்குநர், டிசிபி மியோர் ஃபரிதலத்ராஷ் வாஷிட் பெர்னாமாவிடம் தெரிவித்தார். 

1988-ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. 

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

--பெர்னாமா