பொது

பொது பயிற்சி கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான கட்டணம் மறு ஆய்வு

10/08/2020 07:27 PM

கோலாலம்பூர், 10 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பொது பயிற்சி கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய அமைச்சர்களுடனான சிறப்புக் கூட்டம் ஒப்புக் கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னர், ஒரு நாளுக்கு 150 ரிங்கிட்டாக இருந்த, தனிநபர் தனிமைப் படுத்துதலுக்கான கட்டணம் தற்போது 100 ரிங்கிட்டிற்கு குறைக்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

ஒரு பராமரிப்பாளர் உட்பட 12 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது. தங்கும் விடுதியிலும் அந்த பயிற்சி கழகத்திலும் வசதிகள் சரிசமமாக இல்லாததால் பயிற்சி கழகத்தின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது. 

பி40 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அண்டை நாட்டில் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட வசதி குறைந்த கைதிகளுக்கும் தனிமைப்படுத்துதலுக்கான கட்டணம் விதிப்பதில் விலக்கு அளிக்கவும் அமைச்சர்களுடனான சிறப்புக் கூட்டம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. 

--பெர்னாமா