விளையாட்டு

டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: இறுதி சுற்றுக்கு ஏண்டர்ஸ் , கெரோலினா தேர்வு

18/10/2020 07:51 PM

ஒடென்ஸ், 18 அக்டோபர் (பெர்னாமா) -- டென்மார்க், ஒடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றில், உபசரணை நாட்டின் ரஸ்முஸ் ஜெம்கி, தமது சக நாட்டவரான ஏண்டர்ஸ் அந்தோசென்-னை சந்திக்க விருக்கிறார்.

அதேவேளையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றுக்கு, மூன்று முறை உலக கிண்ணத்தைக் கைப்பற்றிய கெரோலினா மரின் தகுதிப் பெற்றிருக்கிறார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி ஆட்டத்தில், ரஸ்முஸ் ஜெம்கி, 21-14, 21-17 என்ற புள்ளிகளில் ஜப்பானின் கெந்தா நிஷிமொத்தோவை தோற்கடித்திருக்கிறார்.

மற்றொரு அரையிறுதி சுற்றில், உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் தைப்பே-வின் சோவ் தியன் சென்-னை சந்தித்து விளையாடிய உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரர் டென்மார்க்கின் ஏண்டர்ஸ் அந்தோசென் மிக எளிமையாக 21-17, 21-15 என்ற புள்ளிகளில் வீழ்தி இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில், ஒலிம்பிக் வெற்றியாளர் கெரோலினா மரின், ஜெர்மனியின் யுவோனி லீ-யை 34 நிமிடங்களில்,தோற்கடித்து இறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறார்.

இறுதி சுற்றில், கெரோலினா, கனடாவின் மிஷல் லீ-யை 21-10, 21-7 என்ற நேரடி செட்களில் வீழ்த்திய ஜப்பானின் நோசோமி ஒக்குஹராவை சந்திப்பார்.

-- பெர்னாமா