பொது

சில வெளிநாட்டு செய்திகளின் தொகுப்பு

21/10/2020 05:37 PM

அமெரிக்கா, 21 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்கா கொவிட்-19 நோய் தொற்றை ஒடுக்கி வருவதாக அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை பென்சில்வானியாவில் (PENNSYLVANIA) ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆயினும், அந்நாட்டில் கொவிட்-19 சம்பவங்களும் மரணச் சம்பவங்களும்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 

பொது

உலகம் முழுவதும் இதுவரை, கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 10 லட்சத்து 86,849-ஆக பதிவாகி இருக்கிறது.

இந்நோயினால் இதுவரை, 11 லட்சத்து 30,362 பேர் உயிர் இழந்திருப்பதுடன், மூன்று கோடியே 65 லட்சத்து 50,471 பேர் குணம் அடைந்திருக்கின்றனர்.

பிரேசில்

பிரேசில், சவ் போவ்லோவில் (SAO PAULO) கார் மூலமாக,166 கிளிகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சியை போலீசார் முறியடித்திருக்கின்றனர்.

காப்பாற்றப்பட்ட அனைத்து கிளிகளும் விலங்குகள் பாதுகாக்கும் அரசு சார்பற்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

* நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று செவ்வாய்கக்கிழமை ஒரு குறுங்கோளில் தரையிறங்கியது.

இது, அமெரிக்கா மேற்கொண்ட முதல் முயற்சியாகும். 

அந்த விணகலன், OSIRIS-REX விண்கலத்திலிருந்து 20 கோடி மைல் தொலைவில் பென்னு என்ற சிறுகோள் மேற்பரப்புடன் தொடர்புப்படுத்திக் கொண்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

- பெர்னாமா