பொது

கொவிட்-19: 732 புதிய சம்பவங்கள், ஆறு மரணங்கள் பதிவு

21/10/2020 07:33 PM

புத்ராஜெயா, 21 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில், இன்று, 732 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் வேளையில் மேலும் எட்டு புதிய நோய்த் தொற்றையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.

இன்று அடையாளம் காணப்பட்ட எட்டு புதிய நோய்த் தொற்றுகளில் மூன்று சபா மாநிலத்தை உட்படுத்தியது என்றும் எஞ்சிய ஐந்து, தீபகற்பம் தொடர்புடையது என்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய 732 சம்பவங்களில், 724 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும். எஞ்சிய எட்டு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில், இன்று சிலாங்கூரில் மட்டும் 114 நோய்ச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

அதேவேளையில், இன்று மேலும் ஆறு மரண சம்பவங்கள் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 199-ஆக பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில், இன்று மேலும் 580 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 102 பேரில் 31 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா