அரசியல்

18 வயதில் வாக்களிக்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் - பெர்சத்து

04/04/2021 07:44 PM

புத்ராஜெயா, 04 ஏப்ரல் (பெர்னாமா) --18 வயதில் வாக்களிக்கும் தகுதி தொடர்பாக, 2019-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதைத், தேர்தல் பொறுப்பாண்மை குழு துரித்தப்படுத்த வேண்டும் என்று பெர்சத்து கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.

அரசியலில் இளைஞர்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் பங்கை தமது கட்சி அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளின் வியூகங்கள் பற்றி விவாதிக்க, 12 பேர் அடங்கிய சிறப்பு நடவடிக்கை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு பிரதமர் டான் முகிடின் யாசின் தலைமை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிரதமருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சரவா கூட்டணி கட்சி, GPS-சுக்கு அம்மாநில தேர்தலை எதிர்கொள்வதற்கு, பெர்சத்து உதவ தயாராக இருப்பதாக, உள்துறை அமைச்சருமான ஹம்சா குறிப்பிட்டார்.

-- பெர்னாமா