இலக்கவியல் துறை - 170 கோடி ரிங்கிட்டில் 4% மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது

10/04/2021 08:00 PM

கிளாந்தான், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- அரசாங்கத்தின் நான்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களின் மூலம் இலக்கவியல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 170 கோடி ரிங்கிட்டில் நான்கு விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தியதற்கான காரணத்தைக் கண்டறிய தமது தரப்பு ஆய்வு நடத்தவிருப்பதாக பொருளாதாரத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஸ்தாப்பா முஹமட் தெரிவித்திருக்கிறார்.

அந்த நான்கு திட்டங்களில், தேசிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் PRIHATIN-னின் கீழ் 10 கோடி ரிங்கிட்டும், தேசிய பொருளாதார மீட்புத் திட்டம் PENJANA-வின் கீழ் ஒரு கோடியே 60 லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை டத்தோ ஶ்ரீ முஸ்தாப்பா முஹமட் சுட்டிக் காட்டினார்.

கிளாந்தான், கிழக்கு கடற்கரை பகுதி பொருளாதார மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழம் ஏற்பாடு செய்திருந்த இலக்கவியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா