அரசியல்

உரையாடல் ஒலிபதிவு: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சிகளின் உறவை பாதிக்காது

11/04/2021 06:53 PM

கெடா, 11 ஏப்ரல் (பெர்னாமா) -- அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிட் ஹமிடியும் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உரையாடியதாக சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் ஒலிப்பதிவு குறித்த விவகாரம், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையிலான உறவை பாதிக்கவில்லை.

அரசாங்கம் தற்போது எந்தவொரு சம்பவங்கள் அல்லது தனிநபர்களின் பாதிப்பு இன்றி நிலையாக செயல்பட்டு வருவதாக பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறியிருக்கின்றார்.

''ஒரு கட்சிக்குள், கட்சி மற்றும் கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர். சில சமயங்களில் ஒருவருக்கும் மற்றொருவருக்குமான உறவு அமைப்புகளிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது. சில சமயங்களின் தலைவர்களிடையே சுமூகமான உறவு இருக்காது. ஆனால், கட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்படும். அது தான் இன்றைய சூழ்நிலை,'' என்றார் அவர். 

தொடர் நடவடிக்கைகாக, இவ்விவகாரம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பிரிவுக்கான பிரதமர் துறையின் அமைச்சருமான டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார்.

கெடா, சிக்-யில் இன்று ஞாயிற்றுக்கிழமை மலேசிய பரிவுமிக்க உதவி திட்டத்தை தொடக்கிவைத்த பின்னர் தக்கியுடின் இதனை தெரிவித்தார்.

-- பெர்னாமா