விளையாட்டு

பண்டேஸ்லீகா: பாயேன் முனிக் 3-2 என்ற கோல்களில் வெற்றி

18/04/2021 08:28 PM

பாயேன், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜெர்மனி கிண்ண காற்பந்து போட்டியில், நடப்பு வெற்றியாளரான பாயேன் முனிக் 3-2 என்ற கோல்களில், வொல்ஸ்பேர்க்கை அதன் சொந்த அரங்கில் தோற்கடித்துள்ளது. 

இதன்வழி, 68 புள்ளிகளுடன் அது புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 

ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்கத் தொடங்கிய பாயேன் முனிக்முதல் பாதியிலேயே மூன்று கோல்களையும் போட்டது. 

வொல்ஸ்பேர்க் தற்காப்பு பகுதி பலவீனமான தருணங்கள் பார்த்து பாயேன் முனிக் மிக லாவகமாக கோல்களை அடித்தது. 

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும்  வொல்ஸ்பேர்க், முதல் பாதியில் இரு கோலையும் இரண்டாம் பாதியில் மற்றுமொரு கோலையும் அடித்தது. 
 

--பெர்னாமா