BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
விளையாட்டு

மொந்தே கார்லோ டென்னிஸ் போட்டி; சிட்சிபாஸ் வெற்றி

19/04/2021 04:20 PM

மொனாக்கோ, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- பிரான்சில் நடைபெற்று வந்த மொந்தே கார்லோ டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் கிண்ணத்தை, கிரேக்கத்தின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் முதன் முறையாக வென்று சாதனைப் படைத்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், சிட்சிபாஸ் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லேவை சந்தித்து விளையாடினார்.

ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இவ்வாட்டத்தில், ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-3 6-3 என்ற நேரடி செட்களில் ஆண்ட்ரி ரூப்லே தோற்கடித்தார்.

ஏ.டி.பி மாஸ்டர்ஸ் தொடர் போட்டிகளில் இதுவரை மூன்று மூறை இறுதி சுற்றில் களமிறங்கிய சிட்சிபாஸ், இப்போட்டியில் முதல் முறையாக வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

இத்தொடர் போட்டிகளில், சிட்சிபாசும் ரூப்லேவும் 20-க்கும் அதிகமான வெற்றிப் புள்ளிகளைக் கொண்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா