BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
விளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக் : லிவர்பூல் - லீட்ஸ் யுனைட்டட் சமநிலை

20/04/2021 05:42 PM

லண்டன், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணம் குறித்த செய்தி.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 1-1 என்ற கோல்களில் லீட்ஸ் யுனைட்டட்டுடன் சமலை நிலைக் கண்டிருக்கிறது.

இவ்வாட்டத்தில் சமநிலைக் கண்டதால் புள்ளிப் பட்டியலில் மென்சஸ்சர் சிட்டியுடன் 21 புள்ளிகள் வித்தியாசத்தில், லிவர்பூல் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், தனது ஆட்டக்காரர் செடியோ மேனே மூலம் லீவர்பூலுக்கான முதல் கோல் போடப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு தரப்புகளும் கோல் போடுவதற்கு பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றது.

ஆயினும், ஆட்டம் முடிவடைவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பதாக டியேகோ லோரென்தா லீட்ஸ் யுனைட்டட்டுக்கான முதல் கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார்.

இதனிடையே, ஆட்டம் தொடங்குவதற்கு முன்பதாகவே சூப்பர் லீக் காற்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து லிவர்பூல் மற்றும் லீட்ஸ் யுனைட்டட்டின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அதோடு, லீட்ஸ் யுனைட்டட் ஆட்டக்காரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்திய வேளையில் அந்த அரங்கைக் கடந்து சென்ற விமானமும் அக்காற்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகையையும் பறக்க விட்டது.

-- பெர்னாமா