2021-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் மலேசிய பணக்காரர்கள் பட்டியலில், ரோபர்ட் குவோக் மீண்டும் முதலிடம்

03/06/2021 08:13 PM

சிங்கப்பூர், 03 ஜூன் (பெர்னாமா) -- கடந்த இரண்டு ஆண்டுகள் சரிவுக்குப் பின்னர், 2021-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் மலேசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பணக்காரர்களின் கூட்டு சொத்து மதிப்பு 14 விழுக்காடு உயர்ந்து, ஏறக்குறைய 9 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது.

நிலம் மற்றும் மூலப்பொருள் சாம்ராஜ்யத்தை வழிநடத்தும் டான் ஶ்ரீ ரோபர்ட் குவோக், ஆயிரத்து 220 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து பட்டியலில் முதலிடம் வகிப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்,  ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.

97 வயதுடன் அப்பட்டியலில் மிகப் பழமையானவர் என்ற பெருமையையும் ரோபர்ட் குவோக் பெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தனியார் நிறுவனமான ஹோங் லியோங் குமுமத்தின் இரண்டாம் தலைமுறை தலைவரான டான் ஶ்ரீ குவேக் லெங் சான், 960 கோடி அமெரிக்க டாலருடன் 2-வது இடத்தில் உள்ளார்.

இதனிடையே, கொவிட்-19 பெருந்தொற்றினால், 2020-ஆம் ஆண்டில் மலேசிய பொருளாதாரம் 5.6 விழுக்காடு இறக்கம் கண்டிருந்தாலும், இவ்வாண்டு மீண்டும் அது ஏற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)