2022-ஆம் ஆண்டில் விமானத் தொழிற்துறை இயல்பு நிலைக்கு திரும்பும்

19/06/2021 07:54 PM

கோலாலம்பூர், 19 ஜூன் (பெர்னாமா) -- மாநிலம் கடந்து செல்வதற்கான அனுமதி மற்றும் அனைத்துலக எல்லைகள் மீண்டும் படிப்படியாக திறக்கப்படும் பட்சத்தில், 2022-ஆம் ஆண்டில் விமானத் தொழிற்துறை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும், விமானப் பயணங்களுக்கு எவ்விதமான  இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, சிறந்த கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று, ஏர் ஆசியா குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஶ்ரீ டோனி ஃபெர்னாண்டஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட "Communication Organisational Change Across Culture" எனும் தலைப்பிலான இயங்கலை கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,  பயண நோக்கங்களுக்கு தேவையான ஆவணங்கள் உட்பட எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான தேவைகளையும் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், நாடுகளுக்கு இடையிலான  கலாச்சார வேறுபாடுகள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றினால் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)