பொது

‘walk in’ முறையில் தடுப்பூசியைச் செலுத்தும் மையங்களில் போலீஸ் கண்காணிக்கும்

31/07/2021 08:22 PM

கோலாலம்பூர், 31 ஜூலை (பெர்னாமா) -- வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கவிருக்கும் முன்பதிவு இல்லாமல் அல்லது  ‘walk in’ முறையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் நெரிசலைத் தவிர்க்க, முதலாளிகள் தங்களது பணியாளர்களின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன் பதிவு தேதியை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்நாட்டினருக்கு ‘walk in’ முறையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் நடவடிக்கையை ஏற்பாடு செய்திருப்பதால், தடுப்பூசி மையங்களில் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர், டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைப் போன்று தலைநகரில் உள்ள அந்நிய தொழிலாளர்களை உட்படுத்திய தடுப்பூசி செலுத்தும் மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சோதனை மேற்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், தலைநகரிலுள்ள தடுப்பூசி மையங்களில் பொது மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தங்களது தரப்பு C-I-T-F எனப்படும் கொவிட்-19 நோய்த் தடுப்பு செயலமைப்பிற்கு உதவும் என்றும் அஸ்மி குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை பெர்னாமா தொலைக்காட்சி தொடர்புக் கொண்டப் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)