பொது

கொவிட்-19 எண்டமிக் தயார்நிலை நடவடிக்கைக்கு 47 கோடியே 16 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

19/09/2021 03:55 PM

புத்ராஜெயா, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 எண்டமிக்கில் நுழையும் தயார்நிலை நடவடிக்கைக்காக, அரசாங்கம் 47 கோடியே 16 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருப்பதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

பி40 பிரிவைச் சேர்ந்த மலேசிய குடும்பம், தாங்களும் தங்கள் குடும்பமும் கொவிட்-19 நோயிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்ய கொவிட்-19 பாதுகாப்பு திட்டம், PPC வழங்கும் நோக்கத்தில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பி40 குடும்பங்களின் சுமையைக் குறைக்க, புதிய இயல்பு முறையைப் பழகிக் கொள்ள மற்றும் தங்களின் குடும்பத்தை கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் முயற்சிகளில் ஒன்றாக இது அமையும்.

எனவே, அரசாங்கம் இந்த PPC உதவி வழி, சுவாசக் கவசம், கொவிட்-19 சுய பரிசோதனைக் கருவி, ஆக்ஸிஜன் மற்றும் நாடித்துடிப்பை அளவிடும் மின்னியல் கருவி, TERMOMETER எனும் வெப்பமானி, மற்றும் சுகாதார தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வழங்கவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)