விளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

19/09/2021 06:50 PM

லிவர்பூல், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி குறித்த செய்தி...

சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில், லிவர்பூல் 3-0 என்ற கோல்களில், க்ரிஸ்டல் பேலஸ்சை தோற்கடித்தது.

இதில், முதல் பாதி ஆட்டத்தின் 46 நிமிடத்தில், லிவர்பூல் தாக்குதல் ஆட்டக்காரர் சடியோ மேன் போட்ட கோல், அவரின் 100-வது கோலாக அமைந்தது.

முதல் பாதி ஆட்டம் 1-0 என்று நிறைவடைந்த வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தில், கோல் போட க்ரிஸ்டல் பேலஸ் பல தாக்குதலை மேற்கொண்டது.

எனினும், ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கான இரண்டாவது கோலைப் போட்ட முஹம்மட் சாலாவிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

ஆட்டம் நிறைவடையும் தருணத்தில், மத்திய திடல் ஆட்டக்காரர் நேபி லிவர்பூலுக்கான மூன்றாவது கோலை அடித்தார்.

மற்றொரு நிலவரத்தில், சில சறுக்கல்களைச் சந்தித்து வந்த ஆர்செனல், பேர்ன்லியுடனான ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் வெற்றிப் பெற்றது.

அதன் ஒரே வெற்றிக் கோலை மத்திய திடல் ஆட்டக்காரர மார்டின் ஓடிகார்ட் போட்டார்.

இதனிடையே, மென்செஸ்டர் சிட்டி மற்றும் சௌதெம்ப்ட னுக்கு இடையிலான ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.

இன்றிரவு நடைபெறும் ஆட்டங்களில், மென்செஸ்டர் யுனைடெட், வெஸ்ட் ஹெமைச் சந்திக்கின்ற வேளையில், செல்சியும் டோட்டன்ஹமும் களம் காணவிருக்கும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)