விளையாட்டு

பிரிமியர் லீக்; புள்ளிப்பட்டியலில் செல்சி முன்னிலை

20/09/2021 05:30 PM

லண்டன், 20 செப்டம்பர் ( பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி..

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி 3-0 என்ற கோல்களில் டோட்டன்ஹமை அதன் சொந்த அரங்கில் தோற்கடித்துள்ளது. இதன்வழி,  புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது செல்சி. 

இந்த ஆட்டத்தில்வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கோடு, டோட்டன்ஹம்  தனது சொந்த அரங்கில் களமிறங்கியது.

இரு தரப்பும் கோல் போடுவதில் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அனைத்தும் தகர்க்கப்பட்டு, முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி முடிந்தது. 

இரண்டாம் பாதியில், செல்சி அதன் ஆட்ட வியூகத்தை மாற்றியதன் விளைவாக 49, 57 மற்றும் 92-வது நிமிடங்ளில் தொடர்ச்சியாக மூன்று கோல்களை அடித்து அரங்கை அதிரச் செய்தது. 

மற்றுமொரு ஆட்டத்தில்,  வெஸ்ட் ஹமைச் சந்தித்த  மென்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல்களில் வெற்றிக் கண்டது. 

சவால் நிறைந்த இவ்வாட்டத்தில், வெஸ்ட் ஹம் 30-வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, அடுத்த ஐந்து நிமிடங்களில், கிருஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டருக்கான முதல் கோலை அடித்தார்.

முதல் பாதி ஆட்டம் சமநிலையில் முடிந்த வேளையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் லிங்கார்ட் போட்ட கோல்  மென்செஸ்டரின் வெற்றியை உறுதி செய்தது.

அதேவேளையில், அஸ்டன் வில்லா  3-0 என்ற கோல்களில் எவர்டெனை வீழ்த்தி தன் சொந்த அரங்கில் வெற்றிப் பெற்றது.

 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)