விளையாட்டு

பண்டேஸ்லீகா; சமநிலை முடிவால் இரண்டாம் இடத்தில் வொல்ஸ்பேர்க்

20/09/2021 05:43 PM

ஃபிரங்ஃபேர்ட், 20 செப்டம்பர் ( பெர்னாமா) -- ஜெர்மனி கிண்ண காற்பந்து போட்டியில், வொல்ஸ்பேர்க் (WOLFSBURG)  1-1 என்ற நிலையில்  எயிண்ட்ரேக் ஃபிரங்ஃபேர்ட் (EINTRACHT FRANKFURT) உடன் சமநிலை கண்டது. 

முதல் பாதி ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஃபிரங்ஃபேர்ட் முதல் கோல் அடித்து முன்னிலை வகித்தது. 

ஆனால்,  அந்த வெற்றியை அது தற்காத்து கொள்ள முயற்சித்தும் இரண்டாம் பாதியில் முடியாமல் போனது. 

70-வது நிமிடத்தில் வொல்ஸ்பேர்க்  அடித்த ஒரே கோல், இந்த ஆட்டத்தை சமநிலையில்  முடித்திப்பதால், புள்ளிப்பட்டியலில்  ஃபிரங்ஃபேர்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)