பொது

இவ்வாண்டு முதல் பாதியில் அரசாங்கத்தின் வருமானம் 4.6 விழுக்காடாக உயர்வு

23/09/2021 05:30 PM

கோலாலம்பூர், 23 செப்டம்பர் (பெர்னாமா)-- 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியைக் காட்டிலும்  2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அரசாங்கத்தின் வருமானம் 4.6 விழுக்காடு உயர்ந்து 10,640 கோடி ரிங்கிட்டாக பதிவாகியிருக்கிறது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டின் மத்திய அரசாங்கத்தின் வருமானம் 4.2 விழுக்காடு அதிகரித்து 23, 690 கோடி ரிங்கிட்டாக பதிவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இது உள்நாட்டு மொத்த உற்பத்தி, கே.டி.என்.கே-வின் 15.1 விழுக்காடாகும் என்று முதலாவது துணை நிதி அமைச்சர் முகமட் ஷாஹார் அப்துல்லா தெரிவித்தார். 

2021- ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கணிப்பை விட இதன் அடைவுநிலை மிதமான அளவில் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வருமானத்தின் 71.5 விழுக்காடு நிர்வாக செலவுகளுக்கும், 17.3 விழுக்காடு மேம்பாட்டு செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய 11.2 விழுக்காடு கொவிட்-19 நிதி வாரியத்தின் கீழ் செலவிடப்பட்டிருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நாட்டின் நிதி நிலைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)