BREAKING NEWS   Helicopter crash tragedy affects families of Malaysian Armed Forces, a big loss to the nation - PM Anwar | RMN helicopter crash: PM Anwar expresses condolences, prays the victims' families be given strength in time of tragedy | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | Agong saddened by RMN helicopter crash in Lumut, sends his condolences to victims' families | Tragedi helikopter terhempas beri kesan kepada keluarga Angkatan Tentera Malaysia, kehilangan besar buat negara - PM Anwar | 
சிறப்புச் செய்தி

சமையல் வித்தகர்களுக்குக் கரம் குவிப்போம்

20/10/2021 04:04 PM

கோலாலம்பூர், 20 அக்டோபர் (பெர்னாமா)-- CHEF என்று அழைக்கப்படும் சமையல் வல்லுநர்களுக்கான தினம் இன்று. 

சமையலில் பாண்டித்துவம் பெற்று உலகம் முழுவதும் ஆட்சி செய்து வரும் சமையல் வல்லுநர்கள் இந்நாளைக் கொண்டாடுகின்றனர். 

நெருப்புக்கும்  கரண்டிக்கும் நடுவே நின்று சத்தான உணவை அக்கறையோடு சமைத்து கொடுக்கும் அனைத்து சமையல் கரங்களுக்கும் இந்த தினம் சமர்ப்பணமே. 

ஆரோக்கியமான உணவு நமக்கு அருகிலும் சுற்றிலும் உள்ளது, நாம் அதை அங்கீகரிக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துவோர் பட்டியலில், நளபாகர்களான, சமையல் வல்லுனர்களும் அடங்குவர். 

ஆண் - பெண் என்று இருபாலர்களைக் கடந்து நிற்கும் இவர்கள் சமையல் கலையில் புதுமையும், சமையல் கைகளில் புரட்சியும் செய்பவர்கள். 

18 ஆம் நூற்றாண்டில், ரஷ்யாவில், ஒரு விஞ்ஞானமாக உருவாகத் தொடங்கிய சமையல் கலை, பின்னர் 1888-ஆம் ஆண்டில் முதல் சமையலறையை ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் திறந்தது.

உணவின் ரீதியாக வாழ்வின் அனைத்து இடங்களில் வியாபித்து இருக்கும் இந்த நளபாகர்களைக் கொண்டாடவே சமையல் சமூகங்களின் சங்க முயற்சியால் 2004-ஆம் ஆண்டு தொடங்கி இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  

சமையல் கலையைப் பாடமாகவும் தொழிலாகவும் உலகம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் 70 நாடுகளைச் சேர்ந்த 80 லட்சம் உறுப்பினர்கள் இச்சங்கத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். 

சமையல் வல்லுநர்கள் தவிர அதிகாரிகளின் பிரதிநிதிகள், பயண நிறுவனங்களின் ஊழியர்கள், கேட்டரிங் நிறுவனங்களின் உரிமையாளர்கள், சிறிய உணவகங்கள்,  முதல் பிரபலமான உணவகங்கள், பண்டிகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் என பல நாடுகளின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். 

அவர்கள் சமையல் திறன் போட்டிகளை ஏற்பாடு செய்வது, சுவையன உணவுகளை கண்டுபிடிப்பது, அசல் உணவுகளை தயாரிப்பது, அதனைப் பரிசோதிப்பது போன்றவை அச்சங்கத்தின் முதன்மை நடவடிக்கைகளாக உள்ளன. 

பல நாடுகளில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதால், இந்த சமையல் வல்லுநர்கள் குழந்தைகளின் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்து, ஆரோக்கியமான உணவு தயாரிப்பு மற்றும் சமையல் கலையின் முக்கியத்துவத்தை விளக்குகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)