பொது

தடுப்பூசி எதிர்ப்பு குழுவினருக்கு குறிப்பிட்ட சில சுதந்திரங்களை வழங்காத அணுகுமுறை

21/10/2021 08:03 PM

கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- தடுப்பூசி எதிர்ப்பு குழுவினருக்கு குறிப்பிட்ட சில சுதந்திரங்களை வழங்காத அணுகுமுறையை, சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்கிறது.

கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மறுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சுதந்திரம் மறுக்கப் படுவதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெளிவுப்படுத்தினார்.

''உண்மையில், அவர்களின் தேர்வு அவர்களைதான் சிரமப்படுத்துகிறது. அவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை; பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதில் இருக்கும் அறிவியல்பூர்வமான கூறுகளைக் கேட்க மறுக்கிறார்கள். இறுதியில், தடுப்பூசி பெற்றுக் கொண்ட மக்களைப் போல அவர்களால் சுதந்திரமாக வாழ முடிவதில்லை. இந்த அணுகுமுறையை நாங்கள் தொடர்வோம். துறைகளிலும் நான் இந்த சுதந்திர கட்டுப்பாட்டை அமல்படுத்த ஊக்குவிக்கிறேன். உதாரணத்திற்கு பொதுத் துறை மற்றும் தனியார் துறை போன்றவை,'' என்று அவர் கூறினார்.

மேலவையில் 12-வது மலேசியத் திட்டத்தின் விவாதத்தை நிறைவுச் செய்து வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்திக் கொள்ளும் சட்ட அமலாக்கத்தைவிட, அரசாங்கம் விதித்திருக்கும் இந்த சுதந்திர கட்டுப்பாடானது மேலானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]