பொது

பதின்ம வயதினருக்கு மிக விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் ஒன்றாக மலேசியா

22/10/2021 04:34 PM

புத்ராஜெயா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- உலகளவில் பதின்ம வயதினருக்கு மிக விரைவாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.

இரண்டு மாதத்திற்குள் 12-இல் இருந்து 17 வயதிற்குட்பட்ட 80 விழுக்காட்டு பதின்ம வயதினருக்கு குறைந்தது முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

நாட்டில் நேற்று வியாழக்கிழமை வரை 12-இல் இருந்து 17 வயதிற்குட்பட்ட 13 லட்சத்து 67,216 அல்லது 43.4 விழுக்காட்டு பதின்ம வயதினருக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் COVIDNOW வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு, கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கப்பட்ட பதின்ம வயதினருக்கான கொவிட்-19 தேசிய தடுப்பூசி திட்டத்தில், 25 லட்சத்து 24,156 பேருக்கு குறைந்தது முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்பாக, துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி, துணை கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் மா ஹங் சூன் மற்றும் கொவிட்-19 நோய்த் தடுப்பு செயலமைப்பிலுள்ள அனைவருக்கும் கைரி ஜமாலுடின் தமது டுவிட்டர் பதிவில் இன்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]