உலகம்

இந்தியா: தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிப்பு; பொருளாதாரம் மீட்சி

22/10/2021 05:30 PM

இந்தியா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரமும் மீட்சி பெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிக்கைக்கு உள்நாட்டு பொருட்களை வாங்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

நாட்டில், கொவிட்-19 நோய் பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தரவிதிமுறைக்கு உட்பட்டு பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

''போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஆயுதங்களை (சுவாச கவசங்கள்) கீழே வைக்கக்கூடாது. இந்த தீபாவாளி பண்டிக்கையைக் கவனத்துடன் கொண்டாட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.'' என்றார் அவர். 

ஒன்பது கோடியே 44 லட்சம் பெரியவர்களில் 75 விழுக்காட்டினருக்கு குறைந்தது முதல் தடுப்பூசியும், 31 விழுக்காட்டினருக்கு முழுமையான தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]