விளையாட்டு

டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: மலேசியா அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு

23/10/2021 05:17 PM

டென்மார்க், அக்டோபர் 23 (பெர்னாமா) -- டென்மார்க் ஒடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் இரட்டையர் ஜோடியான நூர் இஸ்சுடின் ரும்சானி மற்றும் கோ சீ பெய் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி போட்டியில் மலேசிய ஜோடி உலகின் ஏழாம் நிலையில் இருக்கும் இந்தோனேசியாவின் இரட்டையர் ஜோடியைத்  தோற்கடித்தது.

ப்பாஜார் அல்பியான் - முகமாட் ரியான் அர்டியாந்தோ ஜோடிக்கு எதிராக சந்தித்த நான்கு போட்டிகளில் மலேசியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

இதனிடையே, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நாட்டின் தேசிய ஆட்டக்காரர் லீ சீ ஜீயா தோல்வி கண்டார்.

39 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இவ்வாட்டத்தில், உபரசனை நாட்டின் விக்டர் எக்சல்சன் (VICTOR AXELSEN) 21-19 மற்றும் 21-19 என்ற நேரடி செட்களில், லீ சீ ஜீயாவை வீழ்த்தினார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2021 அனைத்துலக இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் லீ சீ ஜீயாவைவிடம் தாம் கண்ட தோல்வியை இம்முறை அவரைத் தோற்கடித்து வஞ்சம் தீர்த்துக்கொண்டார் எக்சல்சன்.

மற்றுமொரு நிலவரத்தில் நாட்டின் கலப்பு இரட்டையர் ஜோடி காலிறுதியில் ஜப்பானிடம் தோல்வி கண்டது.

21-19 என்ற புள்ளிகளில் முதல் செட்டை வென்ற தான் கியான் மெங் - லாய் பெய் ஜிங் ஜோடி அடுத்த இரண்டு செட்களில் தோல்வியுற்று அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]