சிறப்புச் செய்தி

வங்காள தேச இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல்

23/10/2021 08:03 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- வங்காள தேசத்தில், இந்துக்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறை தாக்குதலுக்கு உலக அளவில் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.

இது தொடர்பில், சில நாடுகள் தங்களின் ஆட்சேபங்களை வெளிப்படுத்தி வருகின்ற வேளையில், மலேசியாவும் அமைதி, ஒற்றுமை, மத நல்லினக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக மலேசிய இந்து தர்ம மாமன்றம் கூறுகிறது.

மிக அதிக மக்கள் தொகை நாடுகளில் வங்காளதேசதம் 8 வது இடத்தில் உள்ளது.

17 கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 90 விழுகாட்டினர் முஸ்லிம்கள். சுமார் 8.5 விழுக்காட்டு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

வங்காளதேசத்தில் அவ்வப்போது, இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுவதும், இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதும் ஊடகங்கள் வழி வெளிச்சமாகி உள்ளன. கலவரத்தினால் பல இந்துக்கள் கொல்லப்படுவதும் அந்நாட்டின் அமைதிக்கு மருட்டலாக விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடப்பட்டபோது, ஒரு பிரிவினர், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, கோவிலையும் சேதப்படுத்தப்படுத்தினர்.

இதில் அறுவர் பலியாகி இருக்கும் வேளையில், கடந்த சில நாட்களாக பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதும் இந்துக்களின் குடியிருப்புகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, மனிதாபினமற்ற இதுபோன்ற நடவடிக்கைகளை வங்காளதேச அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதனை கண்டிக்கும் வகையில், மலேசிய இந்துக்களின் குரலாக இந்து தர்ம மாமன்றம், மலேசியாவில் செயல்படும், வங்காள தேச தூதரகம் வழியாக மகஜர் ஒன்றை சமர்பித்துள்ளதாக அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை தெரிவித்தார்.

'இதுபோன்ற தாக்குதல்களின் போது, வங்காள தேச அரசாங்கம் பார முகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. 1951-ஆம் ஆண்டில் அந்நாட்டில் இதுக்கலின் மக்கள் தொகை 22 விழுக்காட்டில் இருந்தது. அது 2011 8 விழுக்காட்டில் வந்து நிற்கிறது. கட்டாய மதமாற்றம், ஒடுக்குமுறை, அச்சத்தின் பேரில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது', என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். 

மத மற்றும் சமய நம்பிக்கையின் பேரில் நடத்தப்படும் இது போன்ற வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

அதோடு, வங்காள அரசாங்கம் சட்டரீதியக இதனை அனுகி, அங்குள்ள இந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அந்த மகஜரில் தாங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தொலைபேசியின் வாயிலாக பெர்னாமாவிடம் கூறினார்.

இதனிடையே, நாட்டின் ஒற்றுமை அமைதியை சீர்குழைக்கும் இதுபோன்ற மனிதாபமற்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, இது தொர்டபில் அர்சாங்கம் கடுமையான நடவடிக்கையை முன்னெடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

மூஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காளதேசத்தில் இச்சம்பவம் நடப்பது புதியது அல்ல. 2013 முதல் அங்குள்ள இந்துக்கள் மீது இதுவரை சுமார் 3,600 தாக்குதல்கள் நடப்பட்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)