விளையாட்டு

பண்டஸ்லிகா கிண்ண காற்பந்து போட்டி : பொரிசியா டோர்ட்மண்ட் வெற்றி

28/11/2021 07:18 PM

வோல்ஸ்பக், 28 நவம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லிகா கிண்ண காற்பந்து போட்டி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொரிசியா டோர்ட்மண்ட் 3-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் VFL வோல்ஸ்பக்கை தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே VFL வோல்ஸ்பக் முதல் கோலை அடித்து முன்னணி வகித்தது.

இருப்பினும் 31-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பின் வழி பொரிசியா டோர்ட்மண்ட் ஆட்டத்தை சமன் செய்தது.

முதல் பாதி ஆட்டம் சமநிலை காண, இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு கோல்களை அடித்து வெற்றிப் பெற்று, புள்ளிப்பட்டியலில் பொரிசியா டோர்ட்மண்ட், 30 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]