பொது

ரோன் 97 ரக பெட்ரோல் மூன்று சென் இறக்கம்

01/12/2021 07:52 PM

கோலாலம்பூர், 01 டிசம்பர் (பெர்னாமா) -- நாளை வியாழக்கிழமை, டிசம்பர் 2 முதல் எட்டாம் தேதி வரையில், ரோன் 97 ரக பெட்ரோல் மூன்று சென் இறக்கம் கண்டு, 3 ரிங்கிட் 2 சென்னுக்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர் இரண்டு ரிங்கிட் ஐந்து சென்னிற்கு விற்கப்படும் வேளையில், டீசல் இரண்டு ரிங்கிட் 15 சென்னிற்கும் விற்கப்படும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]