கோலாலம்பூர், 22 மார்ச் (பெர்னாமா) -- சீனா, குவாங்சியில் நிகழ்ந்த MU5735 விமான விபத்தில் மலேசியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தங்கள் தரப்புக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சு உறுதியளித்துள்ளது.
பெய்ஜிங்கிலுள்ள மலேசிய தூதரகத்திற்கும், குன்மிங், நன்னிங் மற்றும் குவாங்சோவிலுள்ள மலேசிய துணை தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
எனினும், இச்சம்பவம் குறித்த அண்மைய நிலவரங்களை அமைச்சு தீவிரமாக கண்காணிக்கும் என்று அவ்வமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த விபத்தில், யாரும் உயிர் தப்பியிருக்கலாம் என்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று நேற்று பாதுகாப்புப்படை உறுதிப்படுத்தியிருந்தது.
நேற்று திங்கட்கிழமை, 123 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 132 பேருடன் பயணித்த இவ்விமானம், சீனா, குவாங்சியில் விபத்துக்குள்ளானது.
-- பெர்னாமா
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை