E-PEMULA திட்டம்: இளைஞர்களிடையே ரொக்கமில்லா பரிவர்த்தனை நடவடிக்கையை ஊக்குவிக்கும்

15/04/2022 07:08 PM

சைபர்ஜெயா, 15 ஏப்ரல் (பெர்னாமா) -- E-PEMULA திட்டத்தின் வழி தகுதிபெற்ற இளைஞர்கள் விவேகமாகச் செலவிடுவதோடு வழங்கப்பட்ட 150 ரிங்கிட்டை உள்நாட்டு தொழில்முனைவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நேரடியாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

தொழில்முனைவர்கள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களின் வியாபாரம் முழுமையாக மீட்சி பெற இது உதவும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  தெரிவித்தார்.

"E-PEMULA திட்டத்தின் வழி 30 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வழி 20 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள். இளைஞர்களிடையே ரொக்கமில்லா பரிவர்த்தனை நடவடிக்கையை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்," என்று பிரதமர் கூறினார்.

ரொக்கமற்ற மக்களை உருவாக்க வியாபாரிகள் மற்றும் பயனீட்டாளர்கள் மத்தியில் மின்னியல் முறையிலான கட்டணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்க அரசாங்கம் உறுதிக்கொண்டிருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயி சப்ரி குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)