கோலாலம்பூர், 20 மே (பெர்னாமா) -- முதல் முறையாக இயங்கலையில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டுக்கான கெஅடிலான் கட்சியின் தேர்தலில், மே 18-ஆம் தேதி தொடங்கி இன்று வரையில் சுமார் 67,419 உறுப்பினர்கள் ADIL செயலி வாயிலாக வாக்களித்துள்ளனர்.
சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள கெஅடிலான் கட்சியின் உறுப்பினர்களின் வாக்குகளும் இதில் அடங்கும் என்று கட்சியின் தேர்தல் செயற்குழு தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
வாக்களிப்பதற்கு 76,926 பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் தங்களது கடமையை நிறைவு செய்வதற்கு இன்று இரவு 11.59 மணி வரையில் கால அவகாசம் இருப்பதாக அவர் கூறினார்.
கட்சித் தேர்தல் தொடங்கி எட்டாவது நாளான இன்று, நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் ஒட்டுமொத்தமாக பதிவாகிய வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியிருப்பதாக அதாவது 90,304 உட்படுத்தி எட்டு சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக சலிஹா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை