COVID–19 NEWS   Spain’s Queen catches COVID-19 amid countrywide spike in infections | S Korea’s new COVID-19 cases bounce back to over 10,000 amid resurgence woes | Italy's COVID-19 transmission rate rises for 4th consecutive week | N Korea's first COVID-19 cases traced to area bordering S Korea: State media | COVID: Rise in new infections, drop in death cases last week - Health DG | 
சிறப்புச் செய்தி

கோப்பைத் தேநீருக்கு கோடான கோடி விரும்பிகள்

21/05/2022 08:02 PM

கோலாலம்பூர், 21 மே (பெர்னாமா) -- தேநீர் அருந்தும் பழக்கம் பலரது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தினமும் காலையில் தேநீர் அருந்தினால்தான் பலருக்கு, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

இன்று மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக தேநீர் தினத்தை முன்னிட்டு, தேநீர் ஒருவரின் வாழ்வில் எவ்வாறு அங்கம் வகிக்கின்றது என்பது குறித்து தொடர்ந்து காண்போம்.

தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே சீனர்கள் முதலில் கண்டறிந்தனர்.

பின்னர் கி.மு 800-இல் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக, தேயிலை ஜப்பானுக்கு கொண்டுச் செல்லப் பட்டது.

அங்கிருந்து, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு இந்த தேயிலை சென்று சேர்ந்தது.

கால நீரோட்டத்தில், பிளாக் டீ, சீனா டீ போன்ற தேநீர் உட்பட மூலிகை இலைகள், பூக்கள், பழங்கள் உட்படுத்தி பல்வகையான மூலிகை தேநீரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

இந்நிலையில், தண்ணீருக்கு அடுத்து உலகில் அதிக அளவில் அருந்தப்படும் பானம் தேநீர் என்று அமெரிக்காவின் தேயிலை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவிக்கின்றன. மலேசியாவிலும், தேநீருக்கான வரவேற்பு மிகவும் அதிகம்.

''ஒரு குவளை ஒரு ரிங்கிட் மட்டுமே விற்கப்படுகின்றன. ஒரு வருமானமாகவும் சேவையாகவும் இந்த வியாபாரம் செய்யப்படுகின்றன. லாபம் குறைவாக இருந்தாலும், இந்த சேவை வழங்குவது மகிழ்ச்சியே,'' என்று அவர் தெரிவித்தார்.

வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த தேநீரை விரும்பி அருந்துகின்றனர்.

''சிறு வயது முதலே நான் தேநீர் குடிப்பேன். அருமையான நறுமணம் மற்றும் சுவை காரணமாக, மசாலா தேநீரை விரும்பி குடிப்பேன். இதில், இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு உள்ளிட்ட பல்வேறு இந்திய மசாலா மற்றும் மூலிகைகளின் கலவை இருப்பதால் சுவையாக இருக்கும்,'' என்று சிந்துரா மணிசெல்வன் கூறினார்.

''காலை எழுந்தவுடன் சூடாக ஒரு குவளை தேநீர் குடித்தால் அந்த நாளே ரம்மியமாக இருக்கும். தேநீர் மிகவும் பயனுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், உடனே தேநீர் குடித்தால், அந்த பிரச்சனையிலிருந்து நம்மை சற்று விடுவிக்கும்,'' என்று கண்மணி பெரியண்ணன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)