COVID–19 NEWS   Spain’s Queen catches COVID-19 amid countrywide spike in infections | S Korea’s new COVID-19 cases bounce back to over 10,000 amid resurgence woes | Italy's COVID-19 transmission rate rises for 4th consecutive week | N Korea's first COVID-19 cases traced to area bordering S Korea: State media | COVID: Rise in new infections, drop in death cases last week - Health DG | 
அரசியல்

சுரைடாவின் கட்சி மாற்றம்; தாயகம் திரும்பியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - லேரி

27/05/2022 06:40 PM

கோலாலம்பூர், 27 மே (பெர்னாமா) -- அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுரைடா கமாருடின் PBM எனப்படும் BANGSA MALAYSIA கட்சியில் இணையவிருப்பதாக செய்திருக்கும் விண்ணப்பத்திற்கு தாம் வெளிநாட்டில் இருந்து நாடு திருப்பியதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்யவிருப்பதாக கட்சியின் தலைவர், லேரி செங் தெரிவித்தார்.

இன்று வெளிநாட்டிற்குச் செல்லும் அவர் வரும் ஜூன் 7-ஆம் தேதி நாடு திருப்புவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் SNG குறிப்பிட்டார்.

டத்தோ சுரைடா, PBM கட்சியில் இணைய எண்ணம் கொண்டிருப்பதை தமக்கு இப்போதுதான் அறிவிக்கப்பட்டது என்றும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாடு திருப்பியது தெரிவிக்கப்படும் என்றும் SNG கூறினார்.

உறுப்பினர் விண்ணப்பத்தில் தகுந்த செயல்முறை ஒரு பகுதியாக இருப்பதால் அவரின் விண்ணப்பத்தை கட்சியின் தலைமைத்துவம் அது குறித்து விவாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் போராட்டத்தை பகிர்ந்துக் கொள்ளவிருப்பும் எவரையும் PBM வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

PBM கட்சியின் போராட்டம் மற்றும் அதன் ஆறு அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருப்பதால், தாம் அக்கட்சியில் இணையவிருப்பதாக DATUK ZURAIDA நேற்று அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)