விளையாட்டு

எ.ஏஸ்.ரோமா கிளப் வெற்றியைக் கொண்டாடி மகிழும் அந்நாட்டு மக்கள்

27/05/2022 09:21 PM

ரோம், 27 மே (பெர்னாமா) -- ஐரோப்பிய கான்பரன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றிருக்கும் எ.ஏஸ்.ரோமா கிளப்பின் வெற்றியை அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த லீக்கை வெல்வதில் இறுதிவரை கடுமையான போட்டி நிலவியதில் இறுதி ஆட்டத்தில் வெற்றி கண்டு அக்கிளப் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அதன் மகிழ்ச்சியில் ரசிகர்களின் வண்ணமயமான கொண்டாட்டத்தில் எ.ஏஸ்.ரோமா நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ரசிகர்கள் வீதிகள்தோறும் கொடிகளை ஏந்தி, வாண வேடிக்கை வெடித்து கொண்டாடிய காட்சிகளை ஊடகங்கள் படம் பிடித்துள்ளன.

புதன்கிழமை அல்பேனியாவில் நடந்த இறுதிப் போட்டியில் பெய்னூர்டை 1-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தி எ.ஏஸ்.ரோமா யூரோபா வரலாறு படைத்தது.

இதனிடையே, 22 வயதான ஜானியோலோ 2007 சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூலுக்கு எதிராக ஃபிலிப்போ கோல் அடித்த முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)