தோக்கியோ, 28 மே (பெர்னாமா) -- நாட்டில் இளைஞர்களை தொழில்திறன் பயிற்சி பெற்று ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்க, மலேசியா ஜப்பானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்னிலையில், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மற்றும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் யோஷி இஷா ஃபுரூ காவா இருவரும், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் வழி மலேசிய இளைஞர்கள் தங்களின் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் ஜப்பானில் ஊதியத்துடன் கூடிய பயிற்சியைப் பெறும் வாய்ப்பை பெறவிருக்கின்றனர்.
இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் இளைஞர்கள் அனைவருக்கும் முறையாக ஜப்பானிய மொழிப் பயிற்சியும் வழங்கப்படும்
இந்தத் திட்டம் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய ஒரு கூட்டுக் குழு அமைக்கப்படும்.
ஜப்பானில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்றுவதன் மூலம் மலேசியர்களால் நல்ல அனுபவத்தையும் தொழில்சார்ந்த நிபுணத்துவத்தையும் பெற முடியும் என்று டத்தோ ஶ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மலேசியாவின் திறமையான தொழிலாளர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை