விளையாட்டு

வெற்றிப் பெறும் இலக்கில் லிவர்பூல்

28/05/2022 08:11 PM

லண்டன், 28 மே (பெர்னாமா) --  ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் இங்கிலந்தின்  லிவர்பூல் நாளை ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டைச் சந்திக்க உள்ளது. 

இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் விலாரியலை 3-2 என தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு லிவர்பூல் தகுதிப் பெற்றிருக்கின்றது. 

மொத்த கோல் எண்ண்க்கையில் வழி 5-2 என்று கம்பீரமாக இறுதி ஆட்டத்தில் கால் வைத்துள்ள அது கிண்ணத்தை வெல்லும் என்ற இலக்கில் உறுதியாக இருக்கின்றது. 

அதேபோல,  3-1 என்று இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டியை தனது சொந்த அரங்கில் தோற்கடித்ததன் மூலம் 6-5 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் இறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் கால் பதித்துள்ளது.

பிரான்சில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 14 முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ள ரியல் மெட்ரிட், 6 முறை வெற்றியாளரான லிவர்பூலை சந்திக்கவுள்ளது.

இந்த ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)