COVID–19 NEWS   Spain’s Queen catches COVID-19 amid countrywide spike in infections | S Korea’s new COVID-19 cases bounce back to over 10,000 amid resurgence woes | Italy's COVID-19 transmission rate rises for 4th consecutive week | N Korea's first COVID-19 cases traced to area bordering S Korea: State media | COVID: Rise in new infections, drop in death cases last week - Health DG | 
உலகம்

இந்தோனேசியாவில் ஃபெரி மூழ்கியதில் 26 பேரை காணவில்லை

28/05/2022 08:33 PM

ஜகார்த்தா, 29 மே (பெர்னாமா) --  இந்தோனேசியா கடல் பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலையில், ஃபெரி ஒன்று டீசல் தீர்ந்ததால் நீரில் மூழ்கியதில் அதில் பயணித்த 26 பேரை காணவில்லை.

சுலாவெசி தீவு மற்றும் போர்னியோவை பிரிக்கும் மகாசார் நீரிணையில் கடந்த வியாழக்கிழமை 43 பயணிகளுடன் அந்த ஃபெரி கவிழ்ந்ததாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சம்பவம் குறித்து, அமலாக்கத் தரப்பினருக்கு இன்று தான் அறிவிக்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்பு பிரிவின் தலைவர், ஜுனாய்டி கூறினார்.

அவ்வழியெ சென்ற இரண்டு படகுகள் அதிலிருந்த 17 பேரை காப்பாற்றியதாகவும் எஞ்சிய பயணிகளை மீட்புப் படையினர் தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

40 மீட்புப் படை உறுப்பினர்கள் தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)