கோத்தா கினாபாலு, 28 மே (பெர்னாமா) -- சபா, கோத்தா கினாபாலு, மங்காத்தாலில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியின் ஐந்தாம் படிவ மாணவர் கடந்த வியாழக்கிழமை சக மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது.
நண்பகல் சுமார் 12 மணிக்கு நடந்த அச்சம்பவத்தில் தாக்கப்பட்ட 17 வயதுடைய அம்மாணவனின் வலது கண்ணம் மற்றும் கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் மேஜையைத் தூக்கி தமது வகுப்பறைக்கு நுழைந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முஹமட் சைடி அப்துல்லா தெரிவித்தார்.
அப்போது, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவர் கும்பலை வழிவிடும்படி கேட்டுக்கொண்ட அம்மாணவை ஒருவரும் பொருட்படுத்தவில்லை என்றும் முஹமட் சைடி கூறினார்.
பலமுறை வழிவிடும்படி கேட்டும் பொருட்படுத்தாத அம்மாணவர்கள் மீது சினமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் அக்கும்பலில் இருந்த ஒரு மாணவரை மேஜையைக் கொண்டு தள்ளியிருக்கிறார்.
அதன் பின்னர், அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் அம்மாணவரைத் தாக்கியிருக்கின்றனர்.
இச்சம்பவம், குற்றவியல் சட்டம் செக்ஷன் 147-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை