போர்ட்டிக்சன், 26 மே (பெர்னாமா) -- நாளை அறிவிக்கப்படும் 2022ஆம் ஆண்டு பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு மீண்டும் பலத்தை கொடுக்கும்.
கட்சியின் தேர்தல் செயற்குழு மையம் (ஜே.பி.பி) அறிவிக்கும் முடிவுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவை கட்சிக்கு புதிய வலிமையை ஏற்படுத்தும் என்றுக் குறிப்பிட்டார்.
இன்று மாலை ஜாலான் பந்தாயில் நடைபெற்ற நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று கட்சியின் ஜே.பி.பி தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தாபா அறிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை