விளையாட்டு

மோசமான வானிலையால் KAME 2022 எவரெஸ்ட் பயணம் ஒத்திவைப்பு

28/05/2022 09:07 PM

கத்மாண்டு, 28 மே (பெர்னாமா) -- எவரெஸ்ட் மலை பகுதியில் மோசமான வானிலையாக இருப்பதால் மலை ஏறும் நடவடிக்கையை KAME 2022 எனப்படும் மலேசிய குடும்பம் எவரெஸ்ட் பயணக்குழு ஒத்தி வைத்துள்ளது.

ஏழாயிரத்து 600 மீட்டர் உயரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மலையேறுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மலையேறும் நடவடிக்கையின் தலைவர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு முடிவை எடுப்பது எளிதான காரியம் அல்ல என்று அப்பயணக்குழுவின் தலைவர் அசிம் அஃபிப் இஷாக் தெரிவித்தார்.

கடந்த மே 22-ஆம் தேதி நான்கு பேர் அடங்கிய குழு தங்களின் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கியது.

நான்காவது முகாமை நெருங்கும் போது பலத்த காற்றின் வேகத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது என்றும் இது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்பதே குழுவின் இலக்கு என்றும் அசாம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர், KAME குழு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அசிம் அஃபிப்  தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)