புத்ராஜெயா, 6 ஜூலை (பெர்னாமா) -- சந்தையில் சமையல் எண்ணெய், கோழி மற்றும் முட்டை விநியோகிப்பு தொடர்பான அண்மைய அறிக்கைக் குறித்து நாளை நடைபெறவிருக்கும் நிதி நெருக்கடியைக் கையாளும் சிறப்புக் குழுவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அறிக்கையை குறிப்பாக ஒரு கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெய் விநியோகம் தொடர்பாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு தாக்கல் செய்யவிருப்பதாக பொருளாதாரத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபா முஹமட் தெரிவித்தார்.
''அண்மைய நிலவரம் குறித்த அறிக்கையை நாளை நாங்கள் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறேன். இந்த அறிக்கை மிகவும் முக்கியம் காரணம் இது, குறிப்பாக விநியோகம் தொடர்பான பிரச்சனை இதற்கு முன்னர் மக்கள் எழுப்பியதாகும். நாங்கள் கடைகளுக்குச் சென்று பார்வையிட்டோம். சில கடைகளில் பாக்கெட் சமையல் எண்ணெய் விநியோகம் இல்லை. இது நாங்கள் கண்காணித்த முக்கியப் பிரச்சனையாகும்,'' என்றார் அவர்.
புத்ராஜெயாவில், ரிசியாமோ கேஃபே-இன் முதலாவது கியோஸ்க் முறையை தொடக்கி வைத்தபோது முஸ்தாபா அவ்வாறு கூறினார்.
நிதி நெருக்கடி பிரச்சனையைக் கையாள அமைச்சு, நிறுவனம் மற்றும் பொது மக்களிடமிருந்து தகவலைச் சேகரிக்க, நிதி நெருக்கடியைக் கையாளும் சிறப்புக் குழுவை உருவாக்க கடந்த ஜூன் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை