பொது

துருக்கிக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் இன்று அங்காரா சென்றடைந்தார்

06/07/2022 11:18 PM

அங்காரா, 6 ஜூலை (பெர்னாமா) -- துருக்கி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதன் தலைநகரமான அங்காராவிற்கு இன்று பயணமானார்.

இஸ்மாயில் சப்ரி மற்றும் பேராளர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி காலை 11.10 மணியளவில் அங்காரா எசன்போகா அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பிரதமரை, துருக்கிய தற்காப்பு அமைச்சர், ஹுலுசி அகார் வரவேற்றப் பின்னர், மரியாதை அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.

வெளியுறவு அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைபுடின் அப்துல்லா, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா, சிறப்பு பணிகளுக்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அஹ்மட் மற்றும் அங்கார துணை கவர்னர் பெர்கே கோவ்சினர் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இஸ்தான்புல் சென்றடைந்த பிரதமர் சபிஹா கொக்சென் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகைப் புரிந்தார்.

வியாழக்கிழமை அங்காரா-வில் உள்ள அதிபர் கட்டிட வளாகத்தில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி துருக்கிய அதிபர், ரெசெப் தயிப் எர்டோகனை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மலேசியா மற்றும் துருக்கிய பேராளர்களுக்கு இடையிலான சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

பிரதமரின் இந்த அலுவல் பயணத்தின்போது, சுமார் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தக் கடிதங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)