விளையாட்டு

பண்டஸ்லீகா: புதிய பருவத்தை வெற்றியுடன் தொடங்கிய பொருசியா டார்ட்மண்ட்

07/08/2022 08:01 PM

டார்ட்மண்ட், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 1-0 என்ற கோலில் பயர் லெவர்குசனை (BAYER LEVERKUSEN) தோற்கடித்து பொருசியா டார்ட்மண்ட் (BORUSSIA DORTMUND) பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியின் புதிய பருவத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

இரு கிளப்புகளின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இவ்வாட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய ஒன்பதாவது நிமிடத்தில் மர்கோ ரயஸ் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.

அதன் பின்னர் கோல் அடிப்பதற்கு இரு குழுக்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்க வில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)