COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

உரிமமற்ற கைத்துப்பாக்கி வைத்திருந்த ஆடவருக்கு 5 ஆண்டுகள் சிறை

07/08/2022 10:15 PM

சுங்கைபட்டாணி, 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உரிமமற்ற முறையில் கைதுப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகள் விதித்து தீப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ரோஸ்லான் ஹமிடி முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட தாமான் செஜாத்தியைச் சேர்ந்த 40 வயதுடைய கே.கிருஷ்ணகுமார் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

குற்றப்பத்திரிகையின்படி அவர், REVOLVER  ரக கைத்துப்பாக்கியை எவ்வித அனுமதி இன்றியும் உரிமம் இன்றியும் வைத்திருந்ததாக கூறப்பட்டது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கோலமூடா, தாமான் ரியா ஜெயாவிலுள்ள லோரோங் போரியா 3 என்ற முகவரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர் அத்துப்பாக்கியை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இவ்வழக்கில் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸுல்வாஃட்சிலி ஹசான் ஆஜராகிய வேளையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கென வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளவில்லை. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)