COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

வங்காளதேசத்தை சேர்ந்த முதலாவது அந்நிய தொழிலாளர் குழு இன்று மலேசியா வந்தடைந்தது

09/08/2022 09:14 PM

புத்ராஜெயா, 9 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வங்காளதேசத்தை சேர்ந்த முதலாவது அந்நிய தொழிலாளர் குழு இன்று மலேசியா வந்தடைந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, மலேசியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான வங்காளதேச பிரஜைகளைப் பணியமர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இங்கு வந்துள்ளதாக மனிதவள அமைச்சர், டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தில் தாமும் வங்காளதேச புலம்பெயர்ந்தோர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், இம்ரான் அஹ்மட்டும் கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.

இன்று தொடங்கி கட்டம் கட்டமான மலேசியாவிற்கு வரும் வங்காளதேசப் பிரஜைகள் உற்பத்தி துறையில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சரவணன் குறிப்பிட்டார்.

சுமார் 6,000 வங்காளதேச பிரஜைகளை பணியமர்த்துவதற்காக உள்நாட்டைச் சேர்ந்த 80 முதலாளிகள் செய்த விண்ணப்பத்திற்கு கடந்த வாரம் மலேசியாவிற்கான வங்காளதேச தூதரகம் ஒப்புதல் அளித்தது.

சம்பந்தப்பட்ட முதலாளிகள் குடிநுழைவுத் துறையிடம் லெவி கட்டணத்தை செலுத்திவிட்டால், ஒப்பந்தம் மற்றும் பணியமர்த்துவதற்கான ஆவணங்கள் தொடர்பில் அத்தூரகத்தை நாடலாம் என்றும் சரவணன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)