விளையாட்டு

திட்டமிட்டதை விட உலக கிண்ண காற்பந்து போட்டி ஒரு நாள் முன்பதாகவே தொடங்கப்படும் சாத்தியம்

11/08/2022 06:38 PM

டோஹா, 11 ஆகஸ்ட் (பெர்னாமா) -- திட்டமிட்டதை விட உலக கிண்ண காற்பந்து போட்டி ஒரு நாள் முன்பதாகவே தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழாவை ஒரு நாள் முன்பதாகவே நடத்த கத்தார் ஆர்வம் காட்டுவதாக ரொய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், உலக காற்பந்து சம்மேளனமான FIFA கத்தாரின் விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பொதுவாக, முதல் ஆட்டத்திற்கு முன்பதாகவே போட்டியின் தொடக்க விழா நடத்தப்படும்.

ஆனால், இம்முறை தொடக்க விழாற்கு முன்பதாக A குழுவிற்காக செனெகல், நெதர்லாந்துடனும் B குழுவிற்காக இங்கிலாந்து ஈரானுடனும் மோதவிருக்கின்றன.

ஆகவே கத்தாரின் இந்த விண்ணப்பத்தை FIFA பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)