அரசியல்

பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பா? அம்னோ உச்ச மன்றம் மட்டுமே தீர்மானிக்கும்

15/09/2022 08:09 PM

சுங்கை பெசி, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளுவதா இல்லையா என்பது குறித்து அம்னோ உச்ச மன்றம் மட்டுமே தீர்மானிக்கும்.

அடுத்த உச்ச மன்ற கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று அம்னோவின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

''உச்ச மன்றத்திடம் விட்டு விடுகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்கிறோம். அம்னோ கிளை முதல் பிரிவு வரை யாருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. கட்சியின் முடிவு, உச்ச மன்றத்தால் தீர்மானிக்கப்படும்,'' என்று அவர் கூறினார்.

பாஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையை அம்னோ நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதைக் குறித்து கருத்துரைக்கும் போது, பிரதமர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, 15-ஆம் பொதுத் தேர்தல் குறித்து அம்னோவின் முக்கிய ஐந்து தலைவர்களுடன் சனிக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம், பின்னர் அறிவிக்கப்படும் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)