அரசியல்

அஹ்மட் சாஹிட் ஹமிடி-யின் கூற்று தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது

19/09/2022 07:40 PM

புத்ராஜெயா, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், வெள்ளத்தையும் கனமழையையும் எதிர்கொள்ள தேசிய முன்னணி, BN தயாராக உள்ளது எனும் தேசிய முன்னணி தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி-யின் கூற்று, தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்த சூழ்நிலையிலும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருக்கும் BN-னின் தேர்தல் கேந்திரத்தின் தயார்நிலையையே அவரின் கூற்று குறிப்பதாக கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினர், டான் ஶ்ரீ அனுவார் மூசா தெளிவுப்படுத்தினார்.
 
இருப்பினும், மழைக்காலத்தில் 15-வது பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்ற செயல் என்று கூறிய அனுவார் மூசா, பேரிடர் காலத்தில் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கு அச்சூழல் தடையாக இருக்கும் என்றும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)